தமிழக செய்திகள்

கிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு -கிராம மக்கள் மனு

கிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தனர்

தினத்தந்தி

மேலூர், 

மேலூர் பகுதியில் இயங்கி வந்த 100-க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடைவிதித்தது. கிரானைட் முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் மேலூர் பகுதியில் சேக்கிபட்டியில் மற்றும் அய்யாபட்டி ஊராட்சியில் 3 கிரானைட் குவாரிகளுக்கு அரசு டெண்டர் விடப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சேக்கிபட்டியில் ஒன்று கூடிய கிராம மக்கள் கிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என சேக்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்தனர். மலும் மதுரை கலெக்டரிடம் மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு