சென்னை,
அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்த கடிதத்தில், அகமதாபாத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் வழியில் கல்வி கற்பித்து வந்த பள்ளி, வருகைப் பதிவு குறைந்ததை காரணம் காட்டி திடீரென மூடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அங்கு வாழும் தமிழ் பிள்ளைகள், தங்கள் படிப்பைக் கைவிடுவதைத் தவிர வேறுவழி இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் குஜராத் முதலமைச்சர் தலையிட்டு, மூடப்பட்ட தமிழ் வழிப் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான செலவை முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.