தமிழக செய்திகள்

சாலையில் படுத்து போராட்டம்: கோவில்பட்டியில் சமூக ஆர்வலர் கைது

இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபகுதியிலும் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி 5-வது தூண் அமைப்பு தலைவர் கையில் தேசியக் கொடியுடன் அப்பகுதிக்கு சென்றார்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபகுதியிலும் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி நேற்று 5-வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம் கையில் தேசியக் கொடியுடன் அப்பகுதிக்கு சென்றார். அவர் இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தின் முன்பு ரோட்டில் பாய் விரித்து, தேசிய கொடியை கையில் ஏந்தி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை கைது செய்ய முயன்றனர். போலீசாருடன் செல்ல மறுத்ததால், அவரை வலுக்கட்டயமாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி