தமிழக செய்திகள்

சொத்து வரி உயர்வை எதிர்த்து ஜி.கே.வாசன் தலைமையில் 22-ந்தேதி ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு சொத்துவரியை உயர்த்தியது, கொரானாவின் தாக்கத்தில் இருந்து மீண்டுவரும் மக்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வரி உயர்வு நாட்டின் முன்னேற்றதிற்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவை மக்களை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், பாமரர் முதல் செல்வந்தவர் வரை கொரோனாவின் தாக்கத்தால் பொருளாதார இழப்பில் இருந்து மீண்டெழும் முன்னரே சொத்துவரி உயர்வை அறிவித்து மக்களை தமிழக அரசு அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நாகர்கோவிலில் அமைந்துள்ள, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ஜி.கே.வாசன் தலைமையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மாவட்ட த.மா.கா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது