விளாத்திகுளம்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், சீராக குடிநீர் வழங்க கோரி விளாத்திகுளம் மார்க்கெட் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.பொதுக் குழு உறுப்பினர் ஜெகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.