தமிழக செய்திகள்

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது : மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்துக்கு வந்திருந்தார். நேற்று அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

சென்னை,

தமிழகத்துக்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை எங்கள் அமைச்சகம் வழங்குகிறது. மண்எண்ணெயை பெட்ரோலியம் அமைச்சகம் வழங்குகிறது. மேற்கு வங்காளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் அரிசியை அதிகளவு விரும்புகின்றனர். எனவே அந்த மாநிலங்கள் அரிசியையே அதிகமாக கேட்கின்றன. என்றாலும், தேவைக்கேற்ப அரிசியை வழங்குகிறோம்.

கோதுமையை கேட்டால் வழங்க தயாராக உள்ளோம். தமிழகத்தில் புழுங்கல் அரிசியை கேட்டால், பச்சரிசியை அதிகளவில் திணிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. தமிழகம் கேட்கும் அரிசி, கோதுமையை தேவைக்கேற்ப வழங்குகிறோம்.

அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலம் தமிழகம். இங்கு 70 சதவீதம் புழுங்கல் அரிசியும், 30 சதவீதம் பச்சரிசியும் வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு