தமிழக செய்திகள்

கலாம் சாட், மைக்ரோசாட் செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் 24-ந்தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

‘கலாம் சாட், மைக்ரோசாட் செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் வருகிற 24-ந்தேதி விண்ணில் பாய்கிறது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

தினத்தந்தி

சென்னை,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்தநிலையில் தற்போது திட மற்றும் திரவ நிலைகளுடன் 4 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்டை இஸ்ரோ தயாரித்து உள்ளது. இது பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 46-வது ராக்கெட்டாகும். அத்துடன் பி.எஸ்.எல்.வி.- டி.எல் என்ற நவீன ரகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது.

இதன்மூலம் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து சிறிய அளவில் தயாரித்துள்ள கலாம் சாட் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த மைக்ரோசாட்-ஆர் ஆகிய 2 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதில் மாணவர்கள் தயாரித்த கலாம் சாட் செயற்கைகோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும், இஸ்ரோ தயாரித்த மைக்ரோசாட்-ஆர் இமேஜிங் செயற்கைகோள் பூமி கண்காணிப்புக்காகவும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்டில் செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இது பூமியின் குறைந்த தூரம் கொண்ட (274.12 கிலோ மீட்டர் தூரம்) சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

இறுதிகட்ட ஆயத்தப்பணிகள் எனப்படும் கவுண்ட் டவுன் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்