தமிழக செய்திகள்

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் 24 பேட்டரிகள் திருட்டு

திருக்கோவிலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் 24 பேட்டரிகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் சந்தப்பேட்டை புறவழிச்சாலை அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் மற்றும் செல்போன் கோபுரம் உள்ளது. இங்கிருந்த 24 பேட்டரிகள் திடீரென மாயமானது. இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரி வடிவேலன் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து பேட்டரிகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்