தமிழக செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒற்றை தலைமை விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு