சுரண்டை:
சுரண்டை நகராட்சி 23-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வள்ளியம்மாள் தலைமையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. தெருக்கள் போக்குவரத்துக்கு உபயோகப்படாமல் உள்ளது. வாறுகால் உடைந்து தெருக்களில் சாக்கடை நீர் செல்கிறது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவில் தெருக்கள் உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுரண்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் நகராட்சி பொறியாளர் முகைதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரத்திற்குள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முதல்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற பிரச்சினைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனக்கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.