தமிழக செய்திகள்

அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ரெயில் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை ஆஸ்பத்திரி, அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ள நிலையில் ரெயில்வே தண்டவாளங்களை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

ரெயிவே நிலையம் அருகே உள்ள தண்டவாளங்கள் வழியாக சென்னையில் இருந்து ரெயில்கள் கடக்கும் போது வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் தண்டவாளங்களை தவிர்த்து வேறு வழியில் செல்ல 1 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.

எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்ட கால கோரிக்கையான ரெயில்வே தண்டவாளத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்