தமிழக செய்திகள்

தொழிலாளி மீது பொய் வழக்கு போட்டதாக கூறி சின்னமனூர் போலீஸ் நிலையம் முன் பொதுமக்கள் தர்ணா

தொழிலாளி மீது பொய் வழக்கு போட்டதாக கூறி சின்னமனூர் போலீஸ் நிலையம் முன் பொதுமக்கள் தர்ணா பாராட்டம் நடத்தினர்.

சின்னமனூர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கூலித்தொழிலாளி. சமூக சங்க தலைவரை மாற்றுவது தொடர்பாக இவருக்கும், பால்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் சின்னமனூர் போலீசில் புகார் கொடுத்தனர். பால்பாண்டி கொடுத்த புகாரில் சுரேஷ் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

இந்நிலையில் சுரேஷ் மீது பொய்வழக்கு போட்டதாக கூறி அந்த பகுதியை சோந்த பொதுமக்கள் நேற்று சின்னமனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...