தமிழக செய்திகள்

வந்தவாசியில் சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

வந்தவாசியில் சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக சுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் கிராம பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கிராமத்தை சேர்ந்த மக்கள் தாலுகா அலுவலகம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தார். அதைத் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு