தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு, காஞ்சீபுரம் வட்டத்தில் கிளார், உத்திரமேரூர் வட்டத்தில் பென்னலூர், வாலாஜாபாத் வட்டத்தில் ஏகனாம்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வல்லக்கோட்டை, குன்றத்தூர் வட்டத்தில் எழிச்சூர் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன்கார்டு/ நகல் ரேஷன்கார்டு, கைப்பேசி பதிவு /மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய ரேஷன்கார்டுகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்