தமிழக செய்திகள்

காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறைதீர்வு முகாம்

திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறைதீர்வு முகாம் நடந்தது.

திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறைதீர்வு முகாம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். அதன்படி நேற்றும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர்.

இதில் பெரும்பாலும் நிலப்பிரச்சனை, பணமோசடி, புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்யாதது உள்ளிட்ட மனுக்களே ஆகும். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவிட்டார். சில மனுக்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையகம்) ஸ்டீபன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...