தமிழக செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் 225 மனுக்கள் பெறப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை, புகார் தொடர்பான மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள், அடிப்படை வசதிகோரியும் என மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தவிபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றார். முன்னதாக, மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற 26 இளைஞர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெகடர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்