தமிழக செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்த 9 மனுதாரர்கள் மீண்டும் புகார் மனு கொடுத்தனர். அதே போன்று புதிதாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50 பேரும் மனு கொடுத்தனர். நேற்று ஒரே நாளில் மொத்தம் 59 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை