கோவை,
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொதுவாழ்வு எங்களுக்கு புதிது அல்ல, நற்பணி இயக்கம் மூலம் எந்த விதமான எதிர்பார்ப்பு இல்லாமல் 40 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்தோம், அதன் உச்சகட்டமாக தற்போது களத்தில் இறங்கியுள்ளோம் என்று கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை வெற்றி பெற வைத்தால் எம்.எல்.ஏ. நிதியை எப்படி செலவு செய்தோம் என்பதை டிஜிட்டல் முறையில் வெளியிடுவோம் என்று அவர் உறுதியளித்தார். மேலும் மதநல்லிணக்கத்திற்கு எதிராக இயங்கும் சக்திகள் எல்லாம், இனி இங்கு விளையாட்டு வேளைக்கு ஆகாது என்பதை புரிந்து கொள்ள மக்கள் நீதி மய்யத்தை வெற்றி பெற வையுங்கள் என்று அவர் தெரிவித்தார்.