மதுரை,
கொரோனா தொற்று காலத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு போதிய கவனம் செலுத்தி, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
எனவே அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், பேரணிகளுக்கு தடை விதிக்க முடியாது என்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதிப்பது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்