தமிழக செய்திகள்

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மேல தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து தரவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அப்பகுதியில் சாலை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் அவர்கள் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலக அதிகாகளை சந்தித்து மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்