தமிழக செய்திகள்

மக்கள் தொடர்பு முகாம்

வாய்மேடு அருகே மக்கள் தொடர்பு முகாம்

தினத்தந்தி

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த பன்னாள் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோட்டாட்சியர் மதியழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வரவேற்றார். இந்த மக்கள் தொடர்பு முகாமில் ஆன்லைன் மூலம் பட்டா மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையான மாற்றங்களுக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை துறையினர், தோட்டக்கலை மற்றும் விவசாயத்துறையினர் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்