தமிழக செய்திகள்

குரங்கணியில் மக்கள் தொடர்பு முகாம்

போடி அருகே குரங்கணியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

போடி அருகே கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குரங்கணியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, 258 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அதை பொதுமக்கள் பார்வையிட்டனர். முகாமில் தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, கொட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்