தமிழக செய்திகள்

பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நாட்டறம்பள்ளி அருகே இலவச பட்டா வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பந்தாரபள்ளி பகுதியை சேர்ந்த பொது மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையில் போடப்பட்ட கற்களைக் போலீசார் அப்புறப்படுத்தினர்.

இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது