தமிழக செய்திகள்

சிதம்பரம் அருகே பொதுமக்கள் திடீர் மறியல் சாலையை சீரமைக்க கோரிக்கை

சிதம்பரம் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

அண்ணாமலைநகர்,

சாலை மறியல்

சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம்படுகை அருகே சாலை குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாய்க்கற்ற நிலையில் உள்ளதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தொவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் அங்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்