தமிழக செய்திகள்

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. பிளஸ் 1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. 28-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை