தமிழக செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்தார் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் நாராயணசாமி வந்தடைந்தார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவையில் எம்.எல்.ஏ.க் கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் ஏற்கனவே காங்கிரசின் பலம் குறைந்து இருந்த நிலையில் தற்போது மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினர். இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது, சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலம் 12 ஆக குறைந்துள்ளது. எனவே இனிமேல் முதல்-அமைச்சர் நாராயணசாமியால் மெஜாரிட்டியை நிரூபிக்க வாய்ப்பில்லை என தெரிய வந்ததுள்ளது.

நம்பிக்கையை இழந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார். இன்று சட்டசபையை கூட்டுவதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்வார் அல்லது சட்டசபை கூட்டத்தில் தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்து விட்டு ராஜினாமா செய்யலாம் என தெரிகிறது.

இந்நிலையில்,பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முதல்-மந்திரி நாராயணசாமி துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், நாராயணசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் நாராயணசாமி வந்தடைந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி வருகை தந்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியும் சட்டப்பேரவைக்கு வந்தார். அதனைதொடர்ந்து பா.ஜ.க-வைச் சேர்ந்த நியமன உறுப்பினர்களும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு