தமிழக செய்திகள்

புரட்டாசி 2-வது சனிக்கிழமை: கும்பகோணம் ஜெகநாத பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு கும்பகோணம் ஜெகநாத பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கும்பகோணம்,

கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜெகநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மலர் அலங்காரங்களோடு ஜெகநாத பெருமாளுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் செண்பகவல்லி தாயாருக்கும் இன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உத்சவர் மண்டபத்தில் பெருமாள் மற்றும் தாயாரின் சிறப்பு அலங்காரங்களைக் காண பக்தர்கள் கோவிலுக்கு தங்கள் குடும்பங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.