தமிழக செய்திகள்

ரூ.62 லட்சத்திற்கு தேங்காய் கொள்முதல்

பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.62 லட்சத்திற்கு தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது

தினத்தந்தி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இணையவழியில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஏலம் நடைபெற்றது. இதுகுறித்து விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி கூறியதாவது:- மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 6,303 குவிண்டால் தேங்காய் ரூ.62 லட்சத்திற்கும், 58 குவிண்டால் கொப்பரை ரூ.4 லட்சத்திற்கும் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 96 விவசாயிகள் பயன் அடைந்தனர்.

மேலும் பண்ணைவாயில் முறையில் தற்போது விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரடியாக சென்று விவசாயிகளின் விளைப்பொருட்கள் விறப்னை செய்து தரும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்