தமிழக செய்திகள்

பெண்ணை கீழே தள்ளி தாலி சங்கிலி பறிப்பு

ராமநாதபுரம் அருகே பெண்ணை கீழே தள்ளி தாலி சங்கிலி பறிக்கப்பட்டது.

 ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் மேற்கு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன். ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலா (வயது49). இவர் ராமேசுவரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக தினமும் காலை 4.30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி ராமேசுவரத்திற்கு பஸ்சில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி மெயின் ரோட்டிற்கு வருவதற்காக ஆர்.காவனூர் முருகன் கோவிலுக்கும் இ-சேவை மையத்திற்கும் இடையில் பெருங்களுர் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கலாவை அருகில் உள்ள வயலுக்குள் தள்ளி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து கலா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்