தமிழக செய்திகள்

போக்சோ வழக்கில் கைதான புழல் சிறை கைதி ஆஸ்பத்திரியில் திடீர் சாவு

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் போக்சோ வழக்கில் கைதான புழல் சிறை கைதி ஆஸ்பத்திரியில் திடீரென உயிரிழந்தார்.

தினத்தந்தி

வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 48). இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தண்டையார்பேட்டை போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 9-ந்தேதி அன்று சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரீஸ்வரன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை