தமிழக செய்திகள்

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி தற்கொலை

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது 50). இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கடந்த டிசம்பர் மாதம் செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து ராமுவை நேற்று முன்தினம் மாலையில் சிறை போலீசார் மயக்க நிலையில் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்ததாக தெரிகிறது. அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமு ஆஸ்பத்திரி கழிவறையில் துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் அவரது சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை