சென்னை,
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கு காலையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே வினாத்தாள்கள் வெளியாவதாக கடந்த சில நாட்களாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. ஷேர் சாட் என்ற செல்போன் செயலியில் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான காலாண்டுத்தேர்வு வினாத்தாள் வெளியாகவில்லை என்றும் முந்தைய நாட்களில் நடைப்பெற்ற தேர்வுகளின் வினாத்தாள்களே மறுநாள் செயலியில் வெளிவந்ததாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.