சென்னை,
சென்னை அசோக்நகரில் உள்ள நடேசன் சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) தலைமை அலுவலகம் புதிதாக அமைக் கப்பட்டுள்ளது. இதனை நேற்று நடந்த விழாவில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதையடுத்து குத்துவிளக்கு ஏற்றி, அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தின் செயல்பாடுகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் கட்சி அலுவலகத்தில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடைய படங்களுக்கு டி.டி.வி.தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தலைமை அலுவலகத்தில் கட்சி பணிகளையும் அவர்
உடனடியாக தொடங்கினார். கட்சி அலுவலகத்தின் வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது.