தமிழக செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்

சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால், கொரோனா பரவலைக்கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரிக்குக் கீழ் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் மண்டல அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மண்டலத்திற்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மண்டலத்திற்கு ஆபாஷ்குமார், தெற்கு மண்டலத்திற்கு அமரேஷ் பூஜாரி, மேற்கு மண்டலத்திற்கு அபய்குமார் சிங் ஆகியோரும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளார். டிஐஜி புவனேஷ்வரி புறநகர் பகுதிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...