கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட திட்டம்

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ராகுல்காந்தி முதல்கட்டமாக 3 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாளை மறுநாள் (ஜனவரி 14 ஆம் தேதி) தமிழகம் வர உள்ளார். அன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பார்வையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், ராகுல் காந்தி வரும் அதே நாளில் தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை