தமிழக செய்திகள்

ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் பா.ஜ.க. கொள்கைகளுக்கு வரவேற்பு இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்பது கட்சியில் உள்ளவர்களின் ஒருமித்த கருத்தாகும் என்று அவர் கூறினார். பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. பெரிய வெற்றியை பெற்றிருப்பது உண்மைதான் என்று கூறிய அவர் , நேரு, இந்திராகாந்திக்கு பிறகு மோடி பெரும் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் பா.ஜ.க. கொள்கைகளுக்கு வரவேற்பு இல்லை என்று கூறிய கார்த்தி சிதம்பரம் பா.ஜ.க.வை இந்துத்துவா கட்சியாகதான் தமிழக மக்கள் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்