தமிழக செய்திகள்

ராகுல் காந்தியால் இந்தியாவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது - தமிழிசை

ராகுல் காந்தியால் இந்தியாவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

திமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமான உற்பத்தியை அனுமதித்ததே சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணம். ராகுல் காந்தியால் இந்தியாவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த அதிகாரிகள் தந்த தகவலின் பேரிலேயே பசுமை தீர்ப்பாயம் உத்தரவு. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்று கருத்து இல்லை. பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாக முதல்வர் கூறியதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...