தமிழக செய்திகள்

சென்னை மழை.. 3 நாளில் சேர்ந்த குப்பையின் அளவு இவ்வளவா?

குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.

தினத்தந்தி

சென்னை,

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் சென்னையில் நேற்று முன் தினம் தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து இருந்த குப்பைகள் மழைநீரில் அடித்துவரப்பட்டன.

கனமழையின்போது சாலைகளில் ஆங்காங்கே தேங்கி இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சென்னையில் கடந்த 3 நாளில் மட்டும் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 14ம் தேதி 4,967 மெட்ரிக் டன் குப்பைகள், 15ம் தேதி 4,585 மெட்ரிக் டன் குப்பைகள், 16ம் தேதி 4,941 மெட்ரிக் டன் குப்பைகள் என மெத்தம் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்