சென்னை,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அயனாவரம், மணலி, பெரம்பூர், அம்பத்தூர், விருகம்பாக்கம், மடிப்பாக்கம், ஆழ்வார்ப்பேட்டை, ஆவடி, நுங்கம்பாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
அடையாறு, பசுமைவழிச்சாலை, சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாலிகிராமம், தி.நகர், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.