சென்னை,
சென்னையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது,
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் வெள்ளம் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் இருந்த 2 ஆயிரத்து 859 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் மற்றும் தமிழக அரசின் மாநில மீட்புக் குழுக்கள் என மொத்தம் 15 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.10 சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.