தமிழக செய்திகள்

சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் வழக்கமாக டிசம்பர் மாதத்தில் முடிவடைந்தாலும், வருகிற 10-ந்தேதி வரை பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...