தமிழக செய்திகள்

செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

செம்மஞ்சேரியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

சென்னை,

வடகிழக்குப் பருவமழையின்போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் தேங்காத வகையில், தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் ரூ.75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

நூக்கம்பாளையம் மேம்பாலம், அரசன் கழனி ஏரி உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மதுரப்பாக்கம் ஓடை, தெற்கு டிஎல்எப் இடங்களில் நடக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?