தமிழக செய்திகள்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை, செனடாப் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

சென்னை,

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. அப்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்களே ஆகி இருந்த நிலையில், அடுத்த பருவமழைக்குள் மழை நீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி சென்னையில் மழை நீர் தேங்கும் பகுதிகளாக சுமார் 400 இடங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து 310 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மழை நீர் வடிகால் அமைத்து நீர் தேங்கும் இடங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சென்னை ஆழ்வார்பேட்டை செனடாப் சாலை மூப்பனார் பாலம் அருகே சுமார் 2.14 கோடி மதிப்பீட்டில், 870 மீட்டர் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர். அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து முதல்-அமைச்சரிடம் மாநகராட்சி ஆணையர் விளக்கி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து