தமிழக செய்திகள்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பாளையங்கோட்டையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தினத்தந்தி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கியது. பேரணியை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், குடிநீர் வழங்கல் துறை நிர்வாக பொறியாளர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் பேரணியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகளை குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், உதவி நிர்வாக பொறியாளர்கள் மயில்வாகனம், ராமசாமி, டேனியஸ் உதவி பொறியாளர்கள் ராஜூ, மகேஷ், நிலநீர் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை