தமிழக செய்திகள்

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் குறும்படங்கள் மூலம் காணொலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகன சேவையை கலெக்டர் வளர்மதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் மாணவர்கள், மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்களை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்றனர்.

மேலும் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி நிர்வாகப் பொறியாளர் குமரவேல், துணை நிலை நீர் வல்லுநர் மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை