தமிழக செய்திகள்

சீர்காழியில் 2வது நாளாக வடியாத மழை நீர்... மக்கள் கடும் அவதி

சீர்காழியில் நேற்று பெய்த மழைநீர் 2வது நாளாக வடியாததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தினத்தந்தி

மயிலாடுதுறை,

வரலாறு காணாத மழையால் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வரும் புதுமண்ணி ஆற்றில் நேற்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கரை உடைந்து அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் புகுந்தது.

அதனை அடைக்கும் முயற்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் ஒரு சில கிராமங்களில் வயல் எது? சாலை எது? என அடையாளம் காண முடியாத அளவுக்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீரால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்