சென்னை,
சென்னையில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையின் காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. மாநகராட்சி பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை சுற்றியே மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.
முதற்கட்ட மழையின் போது அதிகமாக தேங்கிய மழை நீரை ஊழியர்கள் அப்புறப்படுத்திய நிலையில், நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் மீண்டும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.