தமிழக செய்திகள்

ரஜினியும் பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்-ஆடிட்டர் குருமூர்த்தி

ரஜினியும் பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என ஆடிட்டர் குருமூர்த்தி பேசி உள்ளார்.#Gurumurthy

சென்னை,

சென்னை ஆழ்வார் பேட்டையில் துக்ளக் இதழின் 48-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:

ரஜினியும் பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்.

தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல், இது கழக கட்சிகளை போல் தன்னு டைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது. கழகங் களின் தொடர்ச்சியாகவே கமல் அரசியலுக்கு வருகிறார் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. வளர வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறானது. அவரை போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது.

இனி தி.மு.க., அ.தி.மு.க.வால் இளைஞர்களை ஈர்க்க முடியாது என்பதால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். இலவசம் மற்றும் மானியங்களால்தான் தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்து நம்பிக்கையை அவமானம் செய்வது திராவிட மரபணுவில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மீகத்தை மறக்கடித்துள்ளனர்.

ஆன்மீகம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் குழாயடி சண்டை போல் இருக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் பணப்பட்டுவாடா செய்தது வெளிப்படையாகவே தெரிகிறது. தினகரன் வெற்றி பெற்றதற்கு தி.மு.க.தான் காரணம், தி.மு.க. விலை போயுள்ளது. இவ்வாறு குருமூர்த்தி பேசினார்.

#Gurumurthy #Rajinikanth #BJP

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்