தமிழக செய்திகள்

ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுபவர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திமுக மற்றும் தி.க.வினருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பொறுமையாக உள்ளதை பார்க்கும்போது சங்கடமாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தினத்தந்தி

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு பூமி பூஜை செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.

பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரியாரைப் போன்றவர்கள் இல்லையென்றால் நான் அமைச்சராகி இருக்க முடியாது. ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை.

ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுபவர், அவர் பேசியதில் உள்ள நியாயத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். திமுகவின் முகமூடிதான் தி.க. , தி.க.வினர் ரஜினியை மிரட்டி பார்க்கிறார்களா ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது.

ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை, தமிழச்சியை திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் பொதுநலவாதிகள் தேசியவாதிகள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை