தமிழக செய்திகள்

நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

கன்னட நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூர்,

பிரபல கன்னட நடிகரான அம்பரீஷ் (66) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

அம்பரீஷ், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்தவர்.

அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்ததால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், இன்று இரவு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர்பிரிந்தது.

அம்பரீஷின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நல்ல மனிதநேயமுள்ளவரும், என் நெருங்கிய நண்பரான அம்பரீஷை இன்று இழந்து விட்டேன். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்